/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆம்னி பஸ் மீது கல் வீச்சு; போதை ஆசாமி கைது ஆம்னி பஸ் மீது கல் வீச்சு; போதை ஆசாமி கைது
ஆம்னி பஸ் மீது கல் வீச்சு; போதை ஆசாமி கைது
ஆம்னி பஸ் மீது கல் வீச்சு; போதை ஆசாமி கைது
ஆம்னி பஸ் மீது கல் வீச்சு; போதை ஆசாமி கைது
ADDED : ஜூன் 10, 2024 01:23 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் ஆம்னி பஸ் மீது கல் வீசி தேசப்படுத்திய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவிலிருந்து புதுச்சேரிக்கு நேற்று காலை ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை, கடலுார், குண்டு உப்பலவாடியைச் சேர்ந்த தவுபீக், 33; ஓட்டினார்.
திண்டிவனத்தில் செஞ்சி சாலையில் உள்ள குடிநீர் தொட்டி அருகே 7:15 மணிக்கு வந்த போது, அதே பகுதியில் சாலையோரம் மீன் கடை வைத்திருக்கும், ரோஷணை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குபேந்திரன் மகன் தினேஷ், 33; குடி போதையில் பஸ்சின் பக்க வாட்டு கண்ணாடியை கல் வீசி தாக்கினார். இதில், பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதைப் பார்த்த பொதுமக்கள் தினேைஷ பிடித்து தர்ம அடி கொடுத்து, ரோஷணை போலீசில் ஒப்படைத்தனர்.
ஆம்னி பஸ் டிரைவர் தவுபீக் கொடுத்த புகாரின் பேரில் தினேைஷ போலீசார் கைது செய்தனர்.