/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ரயில் நிலையத்தில் தெற்கு பொது மேலாளர் ஆய்வு ரயில் நிலையத்தில் தெற்கு பொது மேலாளர் ஆய்வு
ரயில் நிலையத்தில் தெற்கு பொது மேலாளர் ஆய்வு
ரயில் நிலையத்தில் தெற்கு பொது மேலாளர் ஆய்வு
ரயில் நிலையத்தில் தெற்கு பொது மேலாளர் ஆய்வு
ADDED : ஜூலை 04, 2024 10:05 PM

விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் ரயில் நிலையம் 1வது பிளாட்பாரத்திற்கு நேற்று மதியம் 1:00 மணிக்கு தனி ஆய்வு ரயில் மூலம் வந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் சிங், ரயில் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதுப்பிப்பு பணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள வரைபடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின், அங்கு நடைபெறும் பணிகள் எந்தளவில் உள்ளது, எப்போது முடிவடையும், அதன் விபரம் குறித்து ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, 1:20 மணிக்கு அதே ரயிலில் புறப்பட்டார்.
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன், முதன்மை தலைமை பொறியாளர் அசோக் வெல்காம் உடனிருந்தனர்.
தொடர்ந்து, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவள்ளூர் ஆகிய ரயில் நிலையங்களை ஆய்வு செய்ததோடு, இந்த தடங்களில் உள்ள தண்டவாளம் உறுதி தன்மை குறித்தும் ஆய்வு செய்தார்.