/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திராவிட கட்சிகள் ஆட்சியில் வேலை வாய்ப்பு இல்லை சவுமியா அன்புமணி சாடல் திராவிட கட்சிகள் ஆட்சியில் வேலை வாய்ப்பு இல்லை சவுமியா அன்புமணி சாடல்
திராவிட கட்சிகள் ஆட்சியில் வேலை வாய்ப்பு இல்லை சவுமியா அன்புமணி சாடல்
திராவிட கட்சிகள் ஆட்சியில் வேலை வாய்ப்பு இல்லை சவுமியா அன்புமணி சாடல்
திராவிட கட்சிகள் ஆட்சியில் வேலை வாய்ப்பு இல்லை சவுமியா அன்புமணி சாடல்
ADDED : ஜூலை 02, 2024 11:29 PM

விக்கிரவாண்டி : தமிழகத்தில் திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் வேலை வாய்ப்பு இல்லை என சவுமிய அன்புமணி பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் அன்புமணிக்கு கடைவீதியில் ஓட்டு சேகரித்த பசுமைத் தாயக தலைவி சவுமியா அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:
விக்கிரவாண்டி தொகுதியில் அதிக அளவு குடிசைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. இத்தனை ஆண்டு காலம் திராவிட கட்சிகள் ஆட்சி செய்தும் குடிசைகள் கட்டடங்களாக மாறவில்லை. தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தொழிற்சாலை இல்லை. கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு செல்ல சரியான பஸ் மற்றும் சாலை வசதிகளும் இல்லை.
தேர்தல் நேரத்தில்தான் ஒரு வார காலத்திற்கு அமைச்சர்கள் முகாமிட்டு மக்களிடம் குறைகளை கேட்பார்கள் அதன் பிறகு அவர்கள் சென்று விடுவார்கள் குறைகள் நிறைவேறாது. தேர்தல் முடிந்த பிறகும் மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள் உங்களுடன் இருப்போம். முன்னாள் முதல்வர் ஜெ., தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு தந்தார். இதுவே மற்ற மாநிலங்களில் அதிகபட்சமாக 50 சதவீதம் தான் உள்ளது.
இதை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சரியான ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லை எனக் கூறி இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும். அனைத்து கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஒரு மாதத்தில் இப்பணியை முடிக்கலாம்.
பா.ம.க., எழுச்சியை பார்த்து தி.மு.க.,வினர் மக்களுக்கு பணம் கொடுத்து கூட்டத்திற்கு வராமல் தடுக்கின்றனர். இவ்வாறு சவுமியா அன்புமணி கூறினார்.
நகர செயலாளர் சங்கர், மாவட்ட அமைப்பாளர் ராஜா, தலைவர் லட்சுமி நாராயணன், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், மாநில செயற்குழு மோகன், ஒன்றிய செயலாளர்கள் சுதாகர், கோபாலகிருஷ்ணன், திருமாவளவன், தாமரைக்கண்ணன், கோபிநாத், கணபதி உட்பட பலர் பங்கேற்றனர்.