/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சிறுகடம்பூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறுகடம்பூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சிறுகடம்பூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சிறுகடம்பூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சிறுகடம்பூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 25, 2024 06:30 AM

செஞ்சி: சிறுகடம்பூர் பெரிய பாளையத்து பவானி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
செஞ்சி சிறுகடம்பூர் சங்கராபரணி ஆற்றங்கரையில் புதிதாக கட்டி உள்ள பெரிய பாளையத்து பவானி அம்மன் கோவிலில் நேற்றுமகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு யாகசாலை பிரவேசமும், கலச பிரதிஷ்டையும் முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது.
நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 9 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 9.20 மணிக்கு கடம் புறப்பாடும் 9.40 மணிக்கு கலச நீர் கொண்டு மகா கும்பாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.