/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
ADDED : ஜூன் 10, 2024 01:26 AM

செஞ்சி : சாத்தனந்தல் சித்தி விநாயகர் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
செஞ்சி அடுத்த சாத்தனந்தல் கிராமத்தில் பொது மக்கள் புதிதாக கட்டியுள்ள சித்தி விநாயகர், பாலமுருகன், பார்வதி சமேத கண்டேஸ்வரர், விஷ்ணு துர்கை, தட்சணாமூர்த்தி, கால பைரவர், ஐயப்பன், ஹயக்ரீவர், பிரம்மா, ஆஞ்சநேயர் மற்றும் நவகிரக கோவில்களுக்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 6ம் தேதி மாலை 4:00 மணிக்கு மகா கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் 8ம் தேதி காலை 6:30 மணிக்கு கோபூஜையும், வேத பாராயணமும், 7:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.
நேற்று காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 8:00 மணிக்கு கடம் புறப்பாடும், 8:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலவர் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.