ADDED : ஜூன் 16, 2024 06:36 AM

செஞ்சி: செஞ்சி, சங்கராபரணி ஆற்றில் குப்பைகளை ஏரித்த போது தீ பரவி ஆற்றில் உள்ள கோரை புற்கள் தீப்பிடித்து எரிந்ததை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.
செஞ்சி நகரில் சேகரிக்கும் குப்பபைகளை கொட்ட நிரந்தர இடம் இல்லை.
இதனால் தினசரி சேகரிக்கும் குப்பையின் ஒரு பகுதியைசெஞ்சி, சங்கராபரணி ஆற்றில் கொட்டி ஏரித்து வருகின்றனர். சாலையோரத்தில் கொட்டி ஏரிப்பதால் இதில் இருந்து வரும் புகைபோக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
இந்நிலையில், நேற்று குப்பையை ஏரித்த போது மதியம் 1:00 மணியளவில் ஆற்றில் வெயில் காரணமாக காய்ந்து இருந்த கோரை புற்கள் மற்றும் சருகுகள் 300 மீட்டர் துாரத்திற்கு தீ பிடித்து எரிந்து அப்பகுதி முழுதும் புகை மண்டலமானது.
இதனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செஞ்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று சாலையோரம் எரிந்த குப்பைகள் மற்றும் கோரை புற்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், தீ கட்டுக்குள் வராமல் ஆற்றின் உள் பகுதியில் தொடர்ந்து பல மணிநேரம் எரிந்து கொண்டிருந்தது.