ADDED : ஜூன் 19, 2024 01:13 AM

திண்டிவனம் : திண்டிவனம் அருகே டிப்பர் லாரியில் வண்டல் மண் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் அருகே வடசிறுவளூரில், வெள்ளிமேடுபேட்டை சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் நேற்று பிற்பகல் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அனுமதியின்றி 2 யூனிட் வண்டல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக லாரி டிரைவரான, கல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தன், 20; என்பவரை கைது செய்து, லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.