/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தேசிய ரக்பி போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை தேசிய ரக்பி போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை
தேசிய ரக்பி போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை
தேசிய ரக்பி போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை
தேசிய ரக்பி போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : மார் 13, 2025 06:43 AM

விழுப்புரம்; விழுப்புரம் பள்ளி மாணவர்கள், தேசிய போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த கொட்டியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஐயனார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காரணமாக, தீவிர பயிற்சி பெற்ற ஐயனார், பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ரக்பி போட்டியிலும், திருச்சி மாவட்டம் தொட்டியதில் நடைபெற்ற மாநில கைப்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதே பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மற்றொரு மாணவர் ஹாதீஸ்வரனும், பீஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ரக்பி போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்றார். இம்மாணவர் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்த இரு மாணவர்களுக்கு, ஜெயேந்திரா பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் பிரகாஷ், செயலாளர் ஜனார்த்தனன் மற்றும் பள்ளி முதல்வர், உடற்கல்வி இயக்குனர்கள் நினைவு பரிசளித்தனர்.