/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சரசுவதி கலை அறவியல் கல்லுாரியில் பா.ம.க.,நிறுவனர் பிறந்த நாள் விழா சரசுவதி கலை அறவியல் கல்லுாரியில் பா.ம.க.,நிறுவனர் பிறந்த நாள் விழா
சரசுவதி கலை அறவியல் கல்லுாரியில் பா.ம.க.,நிறுவனர் பிறந்த நாள் விழா
சரசுவதி கலை அறவியல் கல்லுாரியில் பா.ம.க.,நிறுவனர் பிறந்த நாள் விழா
சரசுவதி கலை அறவியல் கல்லுாரியில் பா.ம.க.,நிறுவனர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 27, 2024 05:09 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்தில் நடந்த முப்பெரும் விழாவில், பா.ம.க.,நிறுவனர் கலந்து கொண்டு பேசினார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாசின் 86வது பிறந்த நாள் விழா திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்திலுள்ள சரசுவதி கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. , பா.ம.க.,கவுரவ தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.
சரசுவதி அம்மையார் முன்னிலை வகித்தார். தலைமை நிர்வாக அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வீரமுத்து வாழ்த்தி பேசினார். பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ், கல்வி வளாகத்தில் 86 மரக்கன்றுகளை நட்டு, சிறப்புரையாற்றினார்.
விழாவில் சிவக்குமார் எம்.எல்.ஏ., அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், விழுப்புரம் மாவட்ட பா.ம.க.,செயலாளர் ஜெயராஜ், தொழில் அதிபர் சுப்ராயலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்லுாரி துணை முதல்வர் பரமகுரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.கல்லுாரி நிர்வாக அலுவலர் சிவா நன்றி கூறினார்.