/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாதிரி ஓட்டுப்பதிவு: கலெக்டர் ஆய்வு மாதிரி ஓட்டுப்பதிவு: கலெக்டர் ஆய்வு
மாதிரி ஓட்டுப்பதிவு: கலெக்டர் ஆய்வு
மாதிரி ஓட்டுப்பதிவு: கலெக்டர் ஆய்வு
மாதிரி ஓட்டுப்பதிவு: கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 19, 2024 11:09 PM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலையொட்டி, நடந்த மாதிரி ஓட்டுப்பதிவை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. 275 ஓட்டுச் சாவடிகளுக்கு 575 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. திருச்சி பெல் இன்ஜினியர்களால் முதல் கட்ட பரிசோதனை செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று தொகுதி தேர்தல் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ள ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்த மாதிரி ஓட்டுப்பதிவை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார். தொகுதி தேர்தல் அலுவலர் சந்திரசேகர், உதவி தேர்தல் அலுவலர் தாசில்தார் யுவராஜ், அலுவலக மேலாளர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.