/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரத்தில் பைக் பெட்டியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு விழுப்புரத்தில் பைக் பெட்டியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
விழுப்புரத்தில் பைக் பெட்டியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
விழுப்புரத்தில் பைக் பெட்டியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
விழுப்புரத்தில் பைக் பெட்டியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
ADDED : ஜூன் 13, 2024 12:10 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த வெங்கந்துார் சின்ன பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கேசவன் மகன் பாலகிருஷ்ணன், 57; விவசாயி. இவர், கடந்த 10ம் தேதி, விழுப்புரத்தில் உள்ள ஸ்டேட் வங்கியிலிருந்து ரூ.1,25,000 பணத்தை எடுத்துக்கொண்டு, தனது பைக் பெட்டியில் வைத்துக்கொண்டு, விழுப்புரம் வழுதரெட்டி, காமன் கோவில் தெருவில் உள்ள நண்பர் மணி வீட்டிற்கு சென்றார்.
அங்கு, பைக் சைடு பெட்டியிலிருந்து ரூ.25,000 பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, மணியிடம் கொடுத்து விட்டு வந்தார். மீண்டும் வந்து வண்டி பெட்டியை பார்த்தபோது, பெட்டியை உடைத்து மர்ம நபர்கள், அதிலிருந்த ரூ.1 லட்சம் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.