/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பி.டி.ஓ.,வுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா பி.டி.ஓ.,வுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
பி.டி.ஓ.,வுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
பி.டி.ஓ.,வுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
பி.டி.ஓ.,வுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
ADDED : ஜூன் 03, 2024 06:39 AM

கண்டமங்கலம், : கண்டமங்கலம் பி.டி.ஓ.,வுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
பி.டி.ஓ., அலுவலக பயிற்சி அரங்கில் நடந்த விழாவில், கிராம ஊராட்சி பி.டி.ஓ., சிவக்குமார் வரவேற்றார்.துணை பி.டி.ஓ., காஞ்சனா, ஒன்றிய பொறியாளர் கற்பகம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய சேர்மன் வாசன் தலைமை தாங்கி ஓய்வு பெற்ற பி.டி.ஓ., ராமுவுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.
கண்டமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கணேசன், மரக்காணம் ஒன்றிய துணைச் சேர்மன் பழனி, ஒன்றிய கவுன்சிலர்கள் தண்டபாணி, ராஜன், பணி மேற்பார்வையாளர்கள் ஜெயசங்கர், கணேஷ், ஊராட்சி தலைவர் கனகராஜ், உதவியாளர்கள் பொன்னி, கீதா மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். துணை பி.டி.ஓ., சோமசுந்தரம் நன்றி கூறினார்.