/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனை கூட்டம் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூலை 16, 2024 11:55 PM
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுாரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆலேசானைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகி பழனிவேல் வரவேற்றார். செயலாளர் ஜெயகாந்தன் கூட்டறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்வராஜ் மாத வரவு மற்றும் செலவு கணக்கை வாசித்தார்.
கூட்டத்தில் திருவெண்ணெய்நல்லுாரில் தேசிய மையமாக்கப்பட்ட வங்கி மற்றும் ஏ.டி.எம்., மையம் அமைக்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கான ரயில்வே பயண கட்டன சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.