/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரிய வகை ஆந்தை: வனத்துறையினர் மீட்பு அரிய வகை ஆந்தை: வனத்துறையினர் மீட்பு
அரிய வகை ஆந்தை: வனத்துறையினர் மீட்பு
அரிய வகை ஆந்தை: வனத்துறையினர் மீட்பு
அரிய வகை ஆந்தை: வனத்துறையினர் மீட்பு
ADDED : ஜூலை 04, 2024 12:33 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் பைபாஸ் சாலையில், பறக்க முடியாமல் தவித்த அரிய வகை ஆந்தையை வனத்துறையினர் மீட்டனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் செல்லும் சர்வீஸ் சாலையோரம், அங்கிருந்த புற்செடிகளுக்கு மத்தியில் நேற்று காலை அரியவகை ஆந்தை ஒன்று நீண்ட நேரமாக மயங்கிய நிலையில் கிடந்தது.
தகவலறிந்து வந்த விழுப்புரம் வனச்சரக ஊழியர்கள் ஆந்தையை மீட்டனர். இதுகுறித்து விழுப்புரம் வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் கூறுகையில், பிடிபட்ட ஆந்தை களஞ்சிய ஆந்தை (பார்ன் அவுல்) இனத்தைச் சேர்ந்தது. வழக்கமாக நம் நாட்டில் பல இடங்களில் இருக்கும் அரிய வகை ஆந்தை இனம் தான். இரவு நேரங்களில் தான் இவைகள் ஆக்டிவாக செயல்படும். பகல் நேரங்களில் செயலிழந்தபடி மரங்களில் ஓய்வெடுக்கும். விழுப்புரம் அருகே வழுதரெட்டி, முத்தாம்பாளையம் உள்ளிட்ட ஏரி பகுதிகளில் இவை இருந்திருக்கலாம். பகல் நேரத்தில் வழி தெரியாமல் பறந்து வந்து, செயலிழந்த நிலையில் அமர்ந்துள்ளது. அடி ஏதும் படவில்லை. ஆரோக்கியமாகவே உள்ளது. கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, பிறகு, காப்பு காடு பகுதியில் விடப்படும்' என்றார்.