/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தமிழகமே ஸ்தம்பிக்கும் போராட்டம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி தமிழகமே ஸ்தம்பிக்கும் போராட்டம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி
தமிழகமே ஸ்தம்பிக்கும் போராட்டம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி
தமிழகமே ஸ்தம்பிக்கும் போராட்டம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி
தமிழகமே ஸ்தம்பிக்கும் போராட்டம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேட்டி
ADDED : ஜூலை 21, 2024 05:29 AM

திண்டிவனம்: ''இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் கடுமையான போராட்டத்தை நடத்தினால் தான் இந்த அரசு பணியும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
வன்னியர் சங்க 45ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி தைலாபுரத்தில் சங்க கொடியை ஏற்றி வைத்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. வன்னியர்களுக்கு 20 சதவீதம், பட்டியல் இன மக்களுக்கு 22 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என வன்னியர் சங்கம் துவங்கிய போதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இடஒதுக்கீடு கிடைப்பதற்காக சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என தற்போதைய முதல்வரை நான் நேரில் சந்தித்து முறையிட்டும், இன்று வரை நிறைவேற்றவில்லை.
இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில், ஏற்கனவே 7 நாட்கள் நடத்திய சாலை மறியலை விட, கடுமையான போராட்டத்தை நடத்தினால்தான் இந்த அரசு பணியும் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி, பா.ம.க., கவுரவ தலைவர் மணி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உடனிருந்தனர்.