/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பொன்முடி மீதான குவாரி வழக்கு; மாஜி சார் பதிவாளர், எஸ்.ஐ., சாட்சியம் பொன்முடி மீதான குவாரி வழக்கு; மாஜி சார் பதிவாளர், எஸ்.ஐ., சாட்சியம்
பொன்முடி மீதான குவாரி வழக்கு; மாஜி சார் பதிவாளர், எஸ்.ஐ., சாட்சியம்
பொன்முடி மீதான குவாரி வழக்கு; மாஜி சார் பதிவாளர், எஸ்.ஐ., சாட்சியம்
பொன்முடி மீதான குவாரி வழக்கு; மாஜி சார் பதிவாளர், எஸ்.ஐ., சாட்சியம்
ADDED : ஜூலை 31, 2024 03:57 AM

விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி மீதான குவாரி வழக்கில், முன்னாள் சார் பதிவாளர், சப் இன்ஸ்பெக்டர் சாட்சியம் அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், பூத்துறை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில், மொத்தமுள்ள 67 சாட்சிகளில், நேற்று முன்தினம் வரை 42 பேர் விசாரிக்கப்பட்டனர்.
நேற்றைய விசாரணையில், வானுார் முன்னாள் சார் பதிவாளர் வெங்கடேசன், விழுப்புரம் எஸ்.பி.சி. ஐ.டி., சப் இன்ஸ்பெக்டர் நேவிஸ் அந்தோணிரோசி ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.
அதனை பதிவு செய்த நீதிபதி பூர்ணிமா, பிற சாட்சிகளின் விசாரணை நாளை (இன்று) தொடரும் என அறிவித்தார்.