/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புதுச்சேரி சாராயம் குடித்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி புதுச்சேரி சாராயம் குடித்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
புதுச்சேரி சாராயம் குடித்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
புதுச்சேரி சாராயம் குடித்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
புதுச்சேரி சாராயம் குடித்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
ADDED : ஜூலை 10, 2024 05:10 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கள்ளச்சாராயத்தை குடித்த 6 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்த வேம்பி மதுரா பூரிகுடிசை கிராமத்தை சேர்ந்தவர்கள் சக்திவேல், 52; பிரபு, 35; கூலி தொழிலாளிகள்.
இவர்கள் நேற்று முன்தினம் மாலை புதுச்சேரி மாநிலம், மதகடிப்பட்டிற்கு சென்று, அங்கிருந்து சாராயம் வாங்கி வந்து தங்கள் ஊரை சேர்ந்த ராஜா, 37; சுரேஷ் பாபு, 36; பிரகாஷ், 38; காளிங்கராஜ், 47; ஆகியோருடன் சேர்ந்து குடித்துள்ளனர்.
அன்று இரவு சக்திவேலு உள்ளிட்ட 6 பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடன் 6 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து கஞ்சனுார் போலீசார் வழக்கு பதிந்து, சிகிச்சை பெற்று வரும் சக்திவேல் உள்ளிட்ட 6 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் இறந்த சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள், திருவெண்ணெய்நல்லுாரில் புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்த கள்ளச்சாராயத்தை குடித்த ஒருவர் இறந்தார். 2 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்த 6 பேர் புதுச்சேரி சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.