Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சொத்து மதிப்பீடு வரைவு வழிகாட்டி பதிவேடு ஆட்சேபணை இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

சொத்து மதிப்பீடு வரைவு வழிகாட்டி பதிவேடு ஆட்சேபணை இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

சொத்து மதிப்பீடு வரைவு வழிகாட்டி பதிவேடு ஆட்சேபணை இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

சொத்து மதிப்பீடு வரைவு வழிகாட்டி பதிவேடு ஆட்சேபணை இருந்தால் புகார் தெரிவிக்கலாம்

ADDED : ஜூன் 15, 2024 06:20 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கிராமங்கள் வாரியாக, சொத்து மதிப்பீடு வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளதால், அதன் மீது ஆட்சேபணை இருந்தால் 15 நாட்களுக்குள் மதிப்பீட்டு துணைக்குழுவிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:

சந்தை வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக, இந்திய முத்திரைச் சட்டப்பிரிவு 47 ஏஏ கீழான, தமிழ்நாடு முத்திரைச்சட்ட விதிகள் 2010-4(2)ன்படி, மைய மதிப்பீட்டு குழு, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கு இணங்க, வருவாய் கிராமங்கள் வாரியாக, வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பார்வையிடும் வகையில், தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் விபரங்கள் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது, ஏதேனும் ஆட்சேபணை மற்றும் கருத்துரைகள் இருப்பின், அதனை 15 நாட்களுக்குள், மதிப்பீட்டு துணைக்குழுவிடம், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us