/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஊரக வளர்ச்சி உதவியாளர்கள் துணை பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு ஊரக வளர்ச்சி உதவியாளர்கள் துணை பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு
ஊரக வளர்ச்சி உதவியாளர்கள் துணை பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு
ஊரக வளர்ச்சி உதவியாளர்கள் துணை பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு
ஊரக வளர்ச்சி உதவியாளர்கள் துணை பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு
ADDED : ஜூலை 28, 2024 04:05 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உதவியாளர்களாக பணிபுரிந்த 15 பேர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதில், கோலியனுார் ஒன்றிய உதவியாளர் அரவிந்ததேவி, கண்டமங்கலம் மண்டலம் 3 துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மேல்மலையனுார் ஒன்றியம் மதுசூதனன், அங்குள்ள மண்டலம் 4 துணை பி.டி.ஓ.,வாகவும், கண்டமங்கலம் ஊர்நல அலுவலர் நிலை 1 முருகன், மயிலம் மண்டலம் 2 துணை பி.டி.ஓ., வாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
வல்லம் ஒன்றியம் ராஜசேகரன், அங்குள்ள மண்டலம் 2 துணை பி.டி.ஓ.,வாகவும், மேல்மலையனுார் ஒன்றியம் ஊர்நல அலுவலர் நிலை 1 கங்காதரன், வல்லம் மண்டலம் 1 துணை பி.டி.ஓ.,வாகவும், செஞ்சி ஒன்றியம் கந்தசாமி, அங்குள்ள மண்டலம் 1 துணை பி.டி.ஓ.,வாக உட்பட 15 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதற்கான உத்தரவை கலெக்டர் பழனி பிறப்பித்துள்ளார்.