Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு வழக்குகளில் தீர்வு 'தாமதம்' முதன்மை மாவட்ட நீதிபதி ஆதங்கம்

அரசு வழக்குகளில் தீர்வு 'தாமதம்' முதன்மை மாவட்ட நீதிபதி ஆதங்கம்

அரசு வழக்குகளில் தீர்வு 'தாமதம்' முதன்மை மாவட்ட நீதிபதி ஆதங்கம்

அரசு வழக்குகளில் தீர்வு 'தாமதம்' முதன்மை மாவட்ட நீதிபதி ஆதங்கம்

ADDED : மார் 11, 2025 06:20 AM


Google News
விழுப்புரம்: நீதிமன்றங்களில் அரசு வழக்குகளில் தீர்வு காணப்படுவது குறைந்து வருவதாக மாவட்ட நீதிபதி கவலை தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத் துவக்க நிகழ்ச்சியில், முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி தலைமை தாங்கி பேசுகையில், 'நீதிமன்றங்களில் அரசு வழக்குகளில் தீர்வு காணப்படுவது குறைந்து வருகிறது. இதில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எதிர்மனுதாரராக உள்ள பல வழக்குகள் தீர்வு காணப்படாமல் உள்ளன.

தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வழக்குகளில் தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல நிலம் கையகம் தொடர்பான வழக்குகளில் தீர்வு காணப்படாமல் உள்ளன. தேசிய மக்கள் நீதிமன்றத்தை வழக்காடிகள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நீதிமன்றக் கட்டணம் இங்கு திரும்ப வழங்கப்படும். காலவிரயம், பணவிரயம் முற்றிலும் தவிர்க்கப்படும்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்று, தீர்வு காண முடியவில்லை என்றாலும், நீதிமன்றங்களிலுள்ள சமரச மையங்களை அணுகி, தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us