/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 14, 2024 11:12 PM

மயிலம்: மயிலம் அடுத்த முப்புளி கிராமத்தில் வரும்முன் காப்போம் பொது மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு, மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார் தலைமை தாங்கினார். மயிலம் வட்டார தலைமை மருத்துவர் தேன்மொழி முன்னிலை வகித்தார்.
முப்புளி அரசு மருத்துவர் ரூபி வரவேற்றார். மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மருத்துவ முகாம் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.
ஊராட்சி தலைவர் சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர் கோவிந்தன் உட்பட பலர் பேசினர்.
முகாமில் டாக்டர்கள் பாரதிதாசன், கலையரசி, சரண்யா, பாலாஜி ஆகியோர் சிகிச்சை அளித்தனர். முகாமை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமணி ஒருங்கிணைத்தார்.
சுகாதார ஆய்வாளர்கள் அசோகன், சுந்தர்ராஜன், கதிரவன், மோகனகிருஷ்ணன் பயனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்தனர். முகாமில் ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, சித்த மருத்துவம் என அனைத்து வகையான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது.,
சமுதாய செவிலியர், கிராம செவிலியர்கள், அங்கன்வாடி, அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.