/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நெடுஞ்சாலையில் பள்ளம்: அச்சத்தில் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலையில் பள்ளம்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்
நெடுஞ்சாலையில் பள்ளம்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்
நெடுஞ்சாலையில் பள்ளம்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்
நெடுஞ்சாலையில் பள்ளம்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 11, 2024 06:45 AM

விழுப்புரம்: விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணிக்கின்றனர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில், புதுச்சேரி, கடலுார் மட்டுமின்றி, சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் வந்து செல்லும் முக்கிய போக்குவரத்து சாலையாக உள்ளது.
இதனால், இந்த புதுச்சேரி நெடுஞ்சாலையில் தினந்தோறும் எண்ணற்ற வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், சாலை அகரம் கிராமத்திற்குச் செல்லும் வளைவில் மெகா சைசில் பள்ளம் உள்ளது.
இந்த சாலையில் அதிவேகமாக வளைந்து செல்லும் இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் அந்த பள்ளத்தில் சிக்கி விபத்தில் சிக்கும் அபாய நிலை நீடிக்கிறது.
இந்த பள்ளத்தில், தற்போது வெறும் மரக்குச்சிகளை நட்டு வைத்துள்ளனர். பள்ளத்தை விரைவாக மூடுவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.