/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பென்ஷன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் அமைச்சரிடம் ஊராட்சி செயலர்கள் மனு பென்ஷன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் அமைச்சரிடம் ஊராட்சி செயலர்கள் மனு
பென்ஷன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் அமைச்சரிடம் ஊராட்சி செயலர்கள் மனு
பென்ஷன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் அமைச்சரிடம் ஊராட்சி செயலர்கள் மனு
பென்ஷன் திட்டத்தில் சேர்க்க வேண்டும் அமைச்சரிடம் ஊராட்சி செயலர்கள் மனு
ADDED : ஜூலை 12, 2024 11:12 PM

விழுப்புரம்: தமிழகத்தில் ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதிய தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரிடம், சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ், துணை தலைவர் கவிச்செல்வன் தலைமையில், மாவட்ட தலைவர் நீலமேகன், மாநில செயற்குழு உறுப்பினர் கணபதி, மாவட்ட செயலாளர் கமலக் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், விழுப்புரத்திற்கு வந்திருந்த, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமியை நேரில் சந்தித்து, ஊராட்சி செயலர்களை ஓய்வூயத்திட்டத்தில் சேர்க்க வலியறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில்,'ஊராக வளர்ச்சித்துறையில் பணியாற்றி வரும் கடைநிலை பணியாளர்களான, ஊராட்சி செயலாளர்கள், அரசுக்கும், பொது மக்களுக்கும், வளர்ச்சிப் பணிகளை கொண்டு சேர்க்கும் பாலமாக பணியாற்றி வருகின்றனர். மேலும், ஊராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்களுக்கு, தமிழக அரசு ரூ.2,000 அறிவித்து, அதனை பெற்று வருகின்றனர்.
தற்போதைய விலை வாசி உயர்வு மற்றும் ஊராட்சி செயலர்களின் வாழ்வாதாரத்தை கருதி, ஓய்வூதிய தொகையினை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், தங்களை ஓய்வூதிய திட்டத்திலும் சேர்த்திட வேண்டும் என, அதில் தெரிவித்திருந்தனர்.