/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூன் 08, 2024 05:26 AM

விழுப்புரம், : கோலியனூர் பி.டி.ஓ., அலுவலகத்தில், 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோலியனுார் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்க மறுக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்தும், மாற்றுத் திறனாளிக்ளுக்கும், ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் சார்பில் நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சங்க ஒன்றிய தலைவர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஜெயக்குமார், துணைச் செயலாளர் முத்துவேல், மாவட்ட குழு மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.