Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொடரும் செயின் பறிப்பு திண்டிவனத்தில் மக்கள் அச்சம்

தொடரும் செயின் பறிப்பு திண்டிவனத்தில் மக்கள் அச்சம்

தொடரும் செயின் பறிப்பு திண்டிவனத்தில் மக்கள் அச்சம்

தொடரும் செயின் பறிப்பு திண்டிவனத்தில் மக்கள் அச்சம்

ADDED : ஜூலை 09, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
திண்டிவனம் நகர பகுதியில் முக்கிய இடங்களிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் நீண்ட காலமாக பழுதாகி கிடப்பதை சரி செய்யாமல் இருப்பதால், திருட்டு, வழிப்பறி சம்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திண்டிவனம் டவுன் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு விரல் விட்டு எண்ணிக்கூடிய அளவில் குற்றப்பிரிவு போலீசார் இருப்பதால், குற்றவாளிகளை பிடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. வழிப்பறி சம்பவம் நடந்து, அதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்குள் அடுத்து ஒரு சம்பவம் நடப்பதால், திண்டிவனம் நகர போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்குகின்றனர்.

கடந்த 4ம் தேதி ஒரே இரவில் பைக்கில் வந்த இரண்டு பெண்களிடம், ெஹல்மட் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், 13 சவரன் தாலிச் செயினை அறுத்துச் சென்றனர்.

இதில் திண்டிவனம், அவரப்பாக்கம் கூட்ரோட்டில் இரவு 9:30 மணியளவில் ஸ்கூட்டரில் வந்த பெண் ஒருவரை பின்தொடர்ந்து வந்த ெஹல்மட் அணிந்து வந்து இரண்டு பேர், அந்த பெண் அணிந்து வந்த 7 சவரன் தாலிச் செயினை அறுத்துச் சென்றனர். அன்று இரவே திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் பைக்கில் வந்த சாந்தி, 60; என்வரின் 6 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.

கடந்த சில தினங்களாக பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் நிலையில், இதுவரை குற்றவாளிகளை பிடிக்காமல் போலீசார் ஆமை வேகத்தில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நகரத்தின் மைய பகுதியில் நடந்த இரண்டு வழிப்பறி சம்பவத்தால், பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்கு விழுப்புரம் எஸ்.பி., கூடுதல் கவனம் செலுத்தி, நகர மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us