Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பென்காக் சிலாட் விளையாட்டு போட்டி

பென்காக் சிலாட் விளையாட்டு போட்டி

பென்காக் சிலாட் விளையாட்டு போட்டி

பென்காக் சிலாட் விளையாட்டு போட்டி

ADDED : ஜூலை 25, 2024 06:24 AM


Google News
Latest Tamil News
விக்கிரவாண்டி: மாநில பென்காக்சிலாட் விளையாட்டில் கள்ளக்குறிச்சி அணி சாம்பியன்ஷிப் வென்றது.

விக்கிரவாண்டி சூர்யா கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு அனைத்து விளையாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் வாலிபால் மணி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மகேஷ் பாபு முன்னிலை வகித்தார்.பென்காக் சிலாட் சங்க மாவட்ட தலைவர் மாஜிசிங் வரவேற்றார்.

மாநில அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் முதலிடத்தை கள்ளக்குறிச்சி அணியினர் வென்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர் .இரண்டாம் இடத்தை திருச்சி மலைக்கோட்டை அணியினரும், மூன்றாம்இடத்தை கடலுார் அணியும், நான்காம் இடத்தை புதுக்கோட்டை அணியினர் வென்றனர் .

சூர்யா பார்மஸி கல்லுாரி முதல்வர் டாக்டர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுவெற்றி பெற்ற அணிகளுக்குபரிசுகளை வழங்கி பாராட்டினார். மாவட்ட விளையாட்டு நலன் அலுவலர் ஜெயகுமாரி,உடற்கல்வி இயக்குனர் ஜோதிபிரியா,மாவட்ட பென்காக் சிலாட் ஒருங்கிணைப்பாளர் முரளி, சூர்யா கல்லுாரி முதல்வர் சங்கர், துணை முதல்வர் ஜெகன், கல்லுாரி முதல்வர்கள் டாக்டர் வெங்கடேஷ், மதன்கண்ணன், பாலாஜி, உடற்கல்வி இயக்குனர்கள் சீனிவாசன், ராம்குமார், அருண்குமார் உட்பட தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலிருந்து 300 விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள்பங்கேற்றனர்.

சங்க செயலாளர் பரந்தாமன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us