/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இடைத்தேர்தலில் மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைப்பு இடைத்தேர்தலில் மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைப்பு
இடைத்தேர்தலில் மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைப்பு
இடைத்தேர்தலில் மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைப்பு
இடைத்தேர்தலில் மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைப்பு
ADDED : ஜூலை 09, 2024 11:38 PM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் இரு மாதிரி ஓட்டு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
தொகுதியில் உள்ள 276 ஓட்டு சாவடிகளுக்கு நேற்று வேன்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டன.
ஓட்டு சாவடி அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு இன்று ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதியில் வி.சாலையில் மாதிரி ஓட்டு சாவடி மையமும், நேமூரில் பெண்களுக்கென தனி ஓட்டு சாவடி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக தொகுதி முழுவதும் துணை ராணுவம் போலீசார் 5,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.