Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

ADDED : ஜூன் 09, 2024 04:46 AM


Google News
Latest Tamil News
மரக்காணம் : கோட்டக்குப்பம் அருகே மொபைல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடியைச் சேர்ந்தவர் வினோத், 27; நேற்று பெரிய முதலியார் சாவடியில் இருந்து ஆரோவில் போகும் சாலை ஓரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு மொபைல் போன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருண், 24; என்பவர் பைக்கில் வந்து வினோத் பேசி கொண்டிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார்.

புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து அருணை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us