ADDED : ஆக 03, 2024 11:54 PM
மரக்காணம்: மரக்காணம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் தயாளன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், சிவஞானம் முன்னிலை வகித்தனர். துணைச் சேர்மன் பழனி வரவேற்றார். கவுன்சிலர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பருவமழை துவங்க இருப்பதால் கிராமங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரத்து வாய்க்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பது குறித்து விவசாதிக்கப்பட்டது.