ADDED : ஜூன் 03, 2024 06:27 AM

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
வட்ட செயலாளர் கண்ணப்பன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணராஜ், சிவராமன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், இஸ்ரேல் அரசு, பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். சுயேச்சையான பாலஸ்தீன நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய அரசு, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட குழு குமார், ராதாகிருஷ்ணன், கீதா, வேல்மாறன், ராஜேந்திரன், சங்கரன், மூர்த்தி, முருகன், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.