/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைது சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைது
சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைது
சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைது
சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைது
ADDED : ஜூலை 04, 2024 03:13 AM

விழுப்புரம் : மேல்மலையனுாரில் தொடர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார்.
மேல்மலையனுார், மந்தவெளி தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் செல்வம், 30; இவர், கடந்த மாதம் 1ம் தேதி, மேல்மலையனுார் ஏரிக்கரை அருகே 150 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தபோது, போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, கள்ளச்சாராயம் விற்று வரும் இவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில், தடுப்புக் காவலில் கைது செய்ய கலெக்டருக்கு, எஸ்.பி., தீபக் சிவாச் பரிந்துரை செய்தார். அதன் பேரில், செல்வத்தை தடுப்புக் காவலில் கைது செய்ய கலெக்டர் பழனி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, செஞ்சி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் செல்வத்தை, தடுப்பு காவலில் நேற்று கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.