/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திண்டிவனம் போலீசார் மீது சட்டக்கல்லுாரி மாணவர் புகார் திண்டிவனம் போலீசார் மீது சட்டக்கல்லுாரி மாணவர் புகார்
திண்டிவனம் போலீசார் மீது சட்டக்கல்லுாரி மாணவர் புகார்
திண்டிவனம் போலீசார் மீது சட்டக்கல்லுாரி மாணவர் புகார்
திண்டிவனம் போலீசார் மீது சட்டக்கல்லுாரி மாணவர் புகார்
ADDED : ஜூன் 05, 2024 11:00 PM
திண்டிவனம்: திண்டிவனத்தில் சட்டக்கல்லுாரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தாஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, மேலஉளுர் கிராமத்தை சேர்ந்த ரவி மகன் அபினேஷ், 22; திண்டிவனம் சரஸ்வதி சட்ட கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நண்பர்கள் இரண்டு பேருடன் , நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணியளவில் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள டீக்கடைக்கு சென்றுவிட்டு, நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அங்கே வந்த திண்டிவனம் டவுன் போலீசார், மாணவர்களை சந்தேககத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் போலீசார் ஒருவர் அபினேைஷ தாக்கியதாக கூறப்படுகிறது.
தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர் அபினேஷ் திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரிடம் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.