/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சதுரங்க விளையாட்டு மாணவிக்கு பாராட்டு சதுரங்க விளையாட்டு மாணவிக்கு பாராட்டு
சதுரங்க விளையாட்டு மாணவிக்கு பாராட்டு
சதுரங்க விளையாட்டு மாணவிக்கு பாராட்டு
சதுரங்க விளையாட்டு மாணவிக்கு பாராட்டு
ADDED : ஜூன் 15, 2024 06:24 AM

விழுப்புரம்: தேசிய அளவிலான சதுரங்க விளையாட்டில் பதக்கம் வென்ற சரஸ்வதி பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், சென்னையில் 67வது இந்திய பள்ளி களின் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் 2023-24 கல்வியாண்டுக்கான தேசிய அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி நடந்தது.
இப்போட்டியில், விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி பிளஸ் 1 மாணவி நித்யாஸ்ரீ இரண்டாமிடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
அவருக்கு அமைச்சர் மகேஷ் பதக்கம் வழங்கி பாராட்டினார். பதக்கம் வென்று வந்த மாணவியை, சரஸ்வதி பள்ளி தாளாளர் ராஜசேகர், பொருளாளர் சிதம்பரம், முதல்வர் யமுனா ராணி ஆகியோர் பாராட்டினர்.