ADDED : ஜூன் 15, 2024 06:17 AM
மரக்காணம்: மரக்காணம் அடுத்த ஆலத்துாரில் மகளைக் கடத்தி சென்றதாக தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
மரக்காணம் அடுத்த ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி, 45; இவரது மகள் கீர்த்திகா, 18; இவரை நேற்று முன்தினம் இரவு 7:30 மணி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, குப்புசாமி தனது மகள் கடத்தப்பட்டதாக அளித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.