ADDED : ஜூன் 04, 2024 11:32 PM

செஞ்சி: வல்லம் அடுத்த நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் தி.மு.க., அமைப்பு சாரா தொழிலாளர் அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடினர்.
மாவட்ட அமைப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் அன்புசெழியன் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் அமுதா ரவிக்குமார், கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி தலைவர் மாரியம்மாள் மாணிக்கம், இளைஞர் அணி அமைப்பாளர் அன்பரசன், ஒன்றிய பிரதிநிதிகள் கோவிந்தன், கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் பாபு, அறிவு, கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.