ADDED : ஜூலை 14, 2024 11:04 PM

திண்டிவனம்: திண்டிவனத்தில் யாதவ சங்கம் சார்பில், அழகு முத்து கோனின் குரு பூஜை விழா நடந்தது.
திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில், அழகு முத்து கோனின் படத்திற்கு சங்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் ராஜாராம், கவுன்சிலர் சதீஷ், வழக்கறிஞர்கள் செந்தாமரைக்கண்ணன், நவீன் பாலாஜி, கமலக்கண்ணன், பொன்னரசு, முருகன், ராஜேஷ், கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.