/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஊராட்சி கிளார்க் வீட்டில் நகை, பணம் கொள்ளை ஊராட்சி கிளார்க் வீட்டில் நகை, பணம் கொள்ளை
ஊராட்சி கிளார்க் வீட்டில் நகை, பணம் கொள்ளை
ஊராட்சி கிளார்க் வீட்டில் நகை, பணம் கொள்ளை
ஊராட்சி கிளார்க் வீட்டில் நகை, பணம் கொள்ளை
ADDED : ஜூலை 18, 2024 11:24 PM
திண்டிவனம்: திண்டிவனத்தில் ஊராட்சி கிளார்க் வீட்டில் புகுந்து நகை, வெள்ளி பொருட்களை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம், பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 45; ஒலக்கூர் ஒன்றியம், அண்டப்பட்டு ஊராட்சி கிளார்க். இவர், நேற்று முன்தினம், குடும்பத்துடன் துாங்கிக் கொண்டிருந்தார்.
நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே அறையில் பார்த்தபோது, பீரோவில் இருந்த இரண்டரை சவரன் நகைகள், ஒன்னேகால் கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.