/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கிரேன் ரோப் அறுந்து தொழிலாளி பலி துார் வாரியபோது பரிதாபம் கிரேன் ரோப் அறுந்து தொழிலாளி பலி துார் வாரியபோது பரிதாபம்
கிரேன் ரோப் அறுந்து தொழிலாளி பலி துார் வாரியபோது பரிதாபம்
கிரேன் ரோப் அறுந்து தொழிலாளி பலி துார் வாரியபோது பரிதாபம்
கிரேன் ரோப் அறுந்து தொழிலாளி பலி துார் வாரியபோது பரிதாபம்
ADDED : ஜூன் 05, 2024 11:01 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே கிணறு துார் வாரியபோது கிரேன் கயிறு அறுந்து விழுந்து தொழிலாளி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், 35: இவரது கிணற்றில் நேற்று காலை 11:30 மணியளவில் துார் வாரும் பணி நடந்தது.
இதில் வி. சாத்தனுார் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 65; பொன்னங்குப்பம் ஜெயமூர்த்தி ,55; ராஜவேல், 47; ஆகியோர் துார் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கிரேன் தொட்டியில் மண்ணை வாரி வைத்து ஆப்ரேட்டர் மணிகண்டன்,55, மேலே துாக்கினார்.
அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் இரும்பு கயிறு அறுந்து மண் தொட்டி கிணற்றுக்குள் இருந்த கிருஷ்ணமூர்த்தி தலையில் விழுந்தது. தலையில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் விழுந்து இறந்தார். உடனிருந்த ராஜவேல் படு காயம் அடைந்தார். அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்த விக்கிரவாண்டி சப் - இன்ஸ்பெக்டர் காத்தமுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து, கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இச்சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.