/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ துாய இருதய ஐ.சி.எஸ்.இ., பள்ளி பானாம்பட்டில் திறப்பு விழா துாய இருதய ஐ.சி.எஸ்.இ., பள்ளி பானாம்பட்டில் திறப்பு விழா
துாய இருதய ஐ.சி.எஸ்.இ., பள்ளி பானாம்பட்டில் திறப்பு விழா
துாய இருதய ஐ.சி.எஸ்.இ., பள்ளி பானாம்பட்டில் திறப்பு விழா
துாய இருதய ஐ.சி.எஸ்.இ., பள்ளி பானாம்பட்டில் திறப்பு விழா
ADDED : ஜூன் 11, 2024 06:56 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பானாம்பட்டு கோணங்கிப்பாளையத்தில், தூய இருதய ஐ.சி.எஸ்.இ., பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது.
புதிய பள்ளி திறப்பு விழாவில் புதுச்சேரி, கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை வகித்து ஆசியுரை வழங்கினார்.
உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பள்ளியை திறந்து வைத்து குத்துவிளக் கேற்றினார்.
விசாலாட்சி பொன்முடி, சி.எஸ்.எஸ்.டி. மாநில தலைவர் குளோரியா, விழுப்புரம் கிறிஸ்து அரசர் ஆலய பங்குதந்தை அருளானந்தம், ஆடிட்டர் குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் தூய இருதய பள்ளி கல்வி அறக்கட்டளை செயலாளர் நிர்மல், பானாம்பட்டு இன்டர்நேஷ்னல் பள்ளி முதல்வர் அருட்சகோதரி சற்குணா, தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மெட்ரிக் பள்ளி முதல்வர் மங்களம், சேக்ரட் ஹார்ட் சென்ட்ரல் பள்ளி முதல்வர் சுசிலா, விழுப்புரம் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், கவுன்சிலர் சத்தியவதி மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில், பள்ளி மாணவர்களுக்கு புதிய பாட புத்தகம் மற்றும் பரிசுகளை வழங்கி அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
தமிழகத்தின் தென் பகுதிகளில் ஆரம்ப காலங்களில் கல்வி வளர்ச்சிக்கு காரணமாக கிறிஸ்துவ மடாலயங்கள் இருந்துள்ளன.
தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கல்வி வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பணியாற்றி வருகின்றனர். அதில் மிக முக்கியமாக, தற்போது தூய இருதய உலகலாவிய பள்ளி விழுப்புரத்தின் கிராமப்புரத்திலும் வந்துள்ளது பாராட்டுக்கள்.
தற்போது உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார், என்று பொன்முடி பேசினார்.