ADDED : ஆக 03, 2024 11:55 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் மனைவியைக் காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம், கிழக்கு சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி எழிலரசி, 48; இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இரு மகன்கள் உள்ளனர். கடந்த ஜூன் 26ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற எழிலரசி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
முருகன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.