ADDED : ஜூலை 29, 2024 06:42 AM
விழுப்புரம், : விழுப்புரம் அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி மகன் பூமிநாதன், 40; கூலி தொழிலாளி. இவரது உறவு பெண் ஒருவர், கணவர் இறந்துவிட்ட நிலையில், 15 வயது மகளுடன் வசித்து வந்தார். அந்த சிறுமி அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
இந்நிலையில், பூமிநாதன் அடிக்கடி உறவினர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு, வீட்டிற்கு வந்த பூமிநாதன், அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், பூமிநாதன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பூமிநாதன், சிறுமிக்கு சித்தப்பா உறவு முறை என, தெரிகிறது.