ADDED : ஆக 02, 2024 01:56 AM
விழுப்புரம்,: விழுப்புரம் அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் அறிவழகி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் விழுப்புரம் அடுத்த பில்லுார் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி சவுந்திரவள்ளி, 40; பெட்டிக் கடையில் சோதனை செய்தனர். அங்கு, குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது. உடன் சவுந்திரவள்ளி மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.