ADDED : ஜூலை 14, 2024 11:13 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
வளனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் தலைமையிலான போலீசார், வளவனுார் கடைவீதியில் நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ரகமத்துல்லா மகன் அப் துல் ஜலிப், 52; என்பவர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.