ADDED : ஆக 04, 2024 12:05 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பசுமைக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில், நடந்த கட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், ஆர்.டி.ஓ., காஜாஷாகுல் ஹமீது உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு பயன்பாட்டை தடுக்கும் விதமாக, மாவட்ட அளவிலான குழு அமைப்பது. மாவட்டத்தின், பசுமை பரப்பினை அதிகரித்திட மரக்கன்றுகள் நடுவது குறித்தும், ஒரு மரம் அகற்றப்பட வேண்டும் எனில், அதற்கு பதிலாக 10 மரங்கள் நடவு செய்து பராமரித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.