/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு டவுன் பஸ் சிறை பிடிப்பு திண்டிவனம் அருகே பரபரப்பு அரசு டவுன் பஸ் சிறை பிடிப்பு திண்டிவனம் அருகே பரபரப்பு
அரசு டவுன் பஸ் சிறை பிடிப்பு திண்டிவனம் அருகே பரபரப்பு
அரசு டவுன் பஸ் சிறை பிடிப்பு திண்டிவனம் அருகே பரபரப்பு
அரசு டவுன் பஸ் சிறை பிடிப்பு திண்டிவனம் அருகே பரபரப்பு
ADDED : ஜூன் 04, 2024 05:19 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே குறித்த நேரத்திற்கு வராததால் அரசு பஸ்சை கிராம மக்கள் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அடுத்த வேங்கை கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் தடம் எண்.17 இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் வேங்கை கிராமத்தில் இரவு ஹால்ட்டாகி, அடுத்து நாள் காலை திண்டிவனத்திற்கு பயணி களை ஏற்றிச் செல்வது வழக்கம். ஆனால், நேற்று முன்தினம் இரவு இந்த பஸ் வேங்கை கிராமத்திற்கு செல்லவில்லை.
இந்நிலையில் நேற்று காலை 8:00 மணியளவில் வேங்கை கிராமத்திற்கு வந்த அரசு டவுன் பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்து பஸ்சை தினமும் முறையாக இயக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தி, இனி, அரசு டவுன் பஸ் முறையாக வந்த செல்ல ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். அதனையேற்று, காலை 8:30 மணிக்கு பஸ்சை விடுவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.