/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இட ஒதுக்கீடு கிடைப்பது உங்கள் கையில் தான் உள்ளது; விக்கிரவாண்டியில் அன்புமணி பேச்சு இட ஒதுக்கீடு கிடைப்பது உங்கள் கையில் தான் உள்ளது; விக்கிரவாண்டியில் அன்புமணி பேச்சு
இட ஒதுக்கீடு கிடைப்பது உங்கள் கையில் தான் உள்ளது; விக்கிரவாண்டியில் அன்புமணி பேச்சு
இட ஒதுக்கீடு கிடைப்பது உங்கள் கையில் தான் உள்ளது; விக்கிரவாண்டியில் அன்புமணி பேச்சு
இட ஒதுக்கீடு கிடைப்பது உங்கள் கையில் தான் உள்ளது; விக்கிரவாண்டியில் அன்புமணி பேச்சு
ADDED : ஜூலை 09, 2024 04:52 AM

விக்கிரவாண்டி : 'தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பது உங்கள் கையில் தான் உள்ளது' என பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதி பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து அய்யூர் அகரம், தென்னமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பேசியதாவது:
இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானதாகும். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் முன்னேற கல்வி வேலை வாய்ப்பு முக்கியம். கடந்த 45 ஆண்டு காலமாக ராமதாஸ் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறார். கடந்த வாரம் சட்டசபையில் முதல்வர் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என கூறிவிட்டார்.
இந்த தேர்தலில் பணம் மூட்டை மூட்டையாய் ஆளும் கட்சியினர் கொடுக்கின்றனர். நீங்கள் பணத்தை வாங்கி விட்டோம் என கருதாமல் அனைத்து ஓட்டுகளையும் மாம்பழம் சின்னத்தில் போடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்த தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றால் ஆட்சி போகப்போவதில்லை. உங்களுக்கான இட ஒதுக்கீடு கிடைப்பது உங்கள் கையில் தான் உள்ளது. இவ்வாறு அன்புமணி பேசினார்.
தொகுதி பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் பாலு சிவக்குமார் எம்.எல்.ஏ., அமைப்பாளர்கள் பழனிவேல், மணிமாறன், செல்வகுமார், சிலம்பரசன் ஒன்றிய செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், சக்திவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.