/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாஜி ராணுவ வீரர்கள் நலச்சங்க பொதுக்குழு மாஜி ராணுவ வீரர்கள் நலச்சங்க பொதுக்குழு
மாஜி ராணுவ வீரர்கள் நலச்சங்க பொதுக்குழு
மாஜி ராணுவ வீரர்கள் நலச்சங்க பொதுக்குழு
மாஜி ராணுவ வீரர்கள் நலச்சங்க பொதுக்குழு
ADDED : ஜூலை 22, 2024 11:53 PM

விழுப்புரம் : வீரத்தமிழர் விழுப்புரம் மாவட்ட முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில் 4ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த கூட்டத்திற்கு, சங்க தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.
பொருளாளர் ஜோசப் ஆரோக்கியராஜ் வரவு செலவு அறிக்கை வாசித்தார். மூத்த உறுப்பினர்கள் கோவிந்தராஜூலு, அகமது ஜர்னி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரி ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அந்தந்த மாவட்ட கலெக்டரால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், விழுப்புரம் மாவட்டத்திலும் வீட்டு வரி விலக்கை அமலுக்கு கொண்டு வர வேண்டும். கார்கில் போரின் வெற்றி பொன்விழாவை இந்தாண்டு டிசம்பர் மாதம் சிறப்பாக கொண்டாடுவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயலாளர் ஜான்சன்தேவ் நன்றி கூறினார்.