ADDED : ஜூன் 16, 2024 06:40 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம்,லயன்ஸ் சர்வீஸ் ட்ரஸ்ட்,அப்போலோ பாலி கிளினிக் சார்பில் நடந்த முகமிற்கு, லயன்ஸ் சர்வீஸ் ட்ரஸ்ட் தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். அப்போலோ பாலி கிளினிக்பாரிநாதன்,செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர்.திண்டிவனம் வேளாண் உதவி இயக்குனர் சரவணன் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் தர்ஷன் சவேரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்கள் 162 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர்.
முகாமில் சர்வீஸ் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் சின்னராசு கஸ்துாரிரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.