/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சின்னசெவலை கிராமத்தில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சின்னசெவலை கிராமத்தில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
சின்னசெவலை கிராமத்தில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
சின்னசெவலை கிராமத்தில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
சின்னசெவலை கிராமத்தில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
ADDED : ஜூன் 12, 2024 07:17 AM

திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே வேளாண் மற்றும் ஊழவர் நலத்துறை சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட கட்டடத்திற்கு அமைச்சர் பொன்முடி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சின்னசெவலை கிராமத்தில் வேளாண் மற்றும் ஊழவர் நலத்துறை சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட உள்ள புதிய ஒழுங்குமுறை விற்பனைக் கூட கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
விழாவிற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ., மணிக்கண்ணன், மாவட்ட சேர்மன் ஜெயசந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் விஸ்வநாதன், சந்திரசேகரன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், துணை சேர்மன் கோமதி நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி சேர்மன் அஞ்சுகம் கணேசன், சின்னசெவலை ஊராட்சி தலைவர் மேகலா வரவேற்றனர். விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்று 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பேசினார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, வேளாண்துறை இணை இயக்குனர் சீனிவாசன், துணை இயக்குனர் சத்தியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.