/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முன்னாள் நகர மன்ற தலைவர் நினைவு நாள் முன்னாள் நகர மன்ற தலைவர் நினைவு நாள்
முன்னாள் நகர மன்ற தலைவர் நினைவு நாள்
முன்னாள் நகர மன்ற தலைவர் நினைவு நாள்
முன்னாள் நகர மன்ற தலைவர் நினைவு நாள்
ADDED : ஜூன் 15, 2024 06:22 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில், முன்னாள் நகர மன்ற தலைவர் ஹீராச்சந்தின் 15ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியையொட்டி, குஷால் சந்த் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேரு வீதியில், தரம் ஜூவல்லர்ஸ் எதிரில் ஹீராச்சந்த் படத்திற்கு தரம் குழும நிர்வாகி பப்ளாசா, மலர் துாவி மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தரம் குழும நிர்வாகிகள் ஜின்ராஜ், நவீன்குமார், அனுராக், அமித், தன்மே மற்றும் முன்னாள் அ.தி.மு.க., செயலாளர் டாக்டர் கணேசன், பெலா காளிதாஸ், முன்னாள் கவுன்சிலர் செந்தில், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அப்பண்டைராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் பாபு, பாரதிதாசன், பாலாஜி, மற்றும் தரம் குழும ஊழியர்கள் பங்கேற்றனர்.